என்றோ படித்த
கவிதை போல்தான்
கிடக்கின்றன அந்த
பாலியல் தொழிலாளியின்
உடைகள்..
கழற்றிப் போட்ட
ஆணுறையைப் போன்றோ
அல்லது
பயனில்லை என எறிந்த
கிழிந்த பையினைப் போன்றோ
தெருவோரம் கிடக்கின்றன
அவளது உடைகள்..
குறைந்த பட்சத்தைவிட
குறைவாக உடை மறைத்த
அவளது உடலை
இலவசமாக
உண்கின்றன கண்களும்
மனங்களும்..
எப்போதேனும்
விழிக்கக் கூடிய அவள்
தொலைந்து போன தன்
உழைப்புப் பணத்தைத் தேடி
அழக்கூடும்..
அல்லது
முந்தைய நாளின்
போதையை வாந்தியெடுக்கக் கூடும்..
ஒரு போதும்
அவள் துயருற்றதில்லை
தன்
நிர்வாணத்துக்காக..
பாலூட்டவோ
பசியாறவோ
வித்தியாசங்களில்லை அவளிடம்..
ஒருவன்
தான் தரும்
பணத்தைத் தாண்டி
கிடைக்கும்
ஒரே ஒருமுத்தம்
அல்லது ஒரே ஒரு
உயிரணைப்பு
இவற்றுக்கான பொருள்
தெரியமல் இருந்தாலும்
பரவாயில்லை..
தன்னிலை மறந்து கிடப்பவளின்
இடுப்பிலிருக்கும் பணத்தை
திருடாமலிருந்தாலே போதும்
இவ்வுலகத்தாரனைவரையும்
நான் நேசிப்பேன்
என்கிறாள் அவள்..
ரட்சிப்பவனின் பெயராலும்
நேசிப்பவளின் பெயராலும்
இவ்வுலகை
நான் ஆசீர்வதிக்கிறேன்..
அப்படியே ஆகுக..
கவிதை போல்தான்
கிடக்கின்றன அந்த
பாலியல் தொழிலாளியின்
உடைகள்..
கழற்றிப் போட்ட
ஆணுறையைப் போன்றோ
அல்லது
பயனில்லை என எறிந்த
கிழிந்த பையினைப் போன்றோ
தெருவோரம் கிடக்கின்றன
அவளது உடைகள்..
குறைந்த பட்சத்தைவிட
குறைவாக உடை மறைத்த
அவளது உடலை
இலவசமாக
உண்கின்றன கண்களும்
மனங்களும்..
எப்போதேனும்
விழிக்கக் கூடிய அவள்
தொலைந்து போன தன்
உழைப்புப் பணத்தைத் தேடி
அழக்கூடும்..
அல்லது
முந்தைய நாளின்
போதையை வாந்தியெடுக்கக் கூடும்..
ஒரு போதும்
அவள் துயருற்றதில்லை
தன்
நிர்வாணத்துக்காக..
பாலூட்டவோ
பசியாறவோ
வித்தியாசங்களில்லை அவளிடம்..
ஒருவன்
தான் தரும்
பணத்தைத் தாண்டி
கிடைக்கும்
ஒரே ஒருமுத்தம்
அல்லது ஒரே ஒரு
உயிரணைப்பு
இவற்றுக்கான பொருள்
தெரியமல் இருந்தாலும்
பரவாயில்லை..
தன்னிலை மறந்து கிடப்பவளின்
இடுப்பிலிருக்கும் பணத்தை
திருடாமலிருந்தாலே போதும்
இவ்வுலகத்தாரனைவரையும்
நான் நேசிப்பேன்
என்கிறாள் அவள்..
ரட்சிப்பவனின் பெயராலும்
நேசிப்பவளின் பெயராலும்
இவ்வுலகை
நான் ஆசீர்வதிக்கிறேன்..
அப்படியே ஆகுக..
No comments:
Post a Comment