Wednesday, 1 January 2014

உதிரும் இலைகளை 
ஒவ்வொன்றாக எடுத்து
கோர்த்துக் கொண்டிருந்தான்
அவன்..

எல்லா 
வனத்தீயிலும்
அவனது மாலையில் இருந்த
இலைகள் மட்டுமே
தப்பிப் பிழைத்திருந்தன..

ஆயிரமாயிரம் கோடி கோடிக்கு மேல்
எண்ண மறந்திருந்தாலும்
அவனது மாலை
ஒரு
புன்னகையின் நீளமே இருந்தது..

மழையை
வனத்தை
பள்ளத்தாக்கை
நதியை
செடியை
அருவியை
கடலை
செத்த மானின் நிறத்தை
புலியின் பசியை
தளர்ந்த மரத்தின்
முத்தத்தை
அவன் இலைகளாகக் கோர்த்திருந்தான்..

எல்லாரும் சொன்னார்கள்
அவன்
நிலத்துக்குள் 
புகுந்துவிட்டானென்று..

எல்லாருக்கும் தெரியும்
அவன் நிலமாகவே
வாழ்கிறானென்று..

யாருக்காவது தெரியுமா..

ஒரு நாள் அவன்
அண்டா கா கசம்
அபு கா ஹுக்கும்
திறந்திடு சீசேம்
என்றபோது
ஒரு புதையல் பேழை
திறப்பது போல
பூமி திறந்ததை..?

5 comments:

  1. ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மிக்க நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் -ரசனைக்கும், வாழ்த்துகளுக்கும்..

    ReplyDelete
  4. எண்ணிக்கை இல்லா எழிலான மாலையாய்க்
    கண்ணில் கலந்த கனவு!

    அருமையாய்க் கவியதில் கூறிய காட்சி மிகவும் சிறப்பு!
    .
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  5. மிக்க நன்றி சகோ இளமதி.. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..

    ReplyDelete