Monday, 6 January 2014

பொன்னரளிப் பூமரம்
ஒரு புறமும்

பவளமல்லி மறுபுறமும் 
இருந்து

தங்கமும், வெள்ளியுமாக
தரை பொசும்பியிருக்கும்
அந்த வீட்டை
நீங்கள் 
புன்னகைக் கண்களோடு
கடந்திருக்கலாம்..

ஆனால்

அருகிலிருக்கும்
இருளோடிய அறையின்
சன்னலுள்ளிருந்து
வெளி பார்க்கும்
ஒருத்தியின்
சுடரும் கத்திக் கண்களை
யார் பார்த்திருக்கக் கூடும்..

மரம் சூழ் உலகு..

No comments:

Post a Comment