பசியாறியவனின்
தூக்கத்துக்காகவும்
நோய் நீங்கியவனின்
பெருமூச்சுக்காகவும்
ஏங்கிய ஒருத்தி காத்திருக்கிறாள்..
ங்ஙா என்ற
ஒற்றைச் சொல்லில்
சாபல்யம் அடைந்தவள்..
எச்சில் வடியும்
ஒற்றை முத்தத்தில்
பிறவிகள் கடந்தவள்..
முதுமையின் நிசப்த வனத்தில்
வார்த்தைகளைப்
பிச்சையெடுத்து
காத்திருக்கிறாள்..
தூக்கத்துக்காகவும்
நோய் நீங்கியவனின்
பெருமூச்சுக்காகவும்
ஏங்கிய ஒருத்தி காத்திருக்கிறாள்..
ங்ஙா என்ற
ஒற்றைச் சொல்லில்
சாபல்யம் அடைந்தவள்..
எச்சில் வடியும்
ஒற்றை முத்தத்தில்
பிறவிகள் கடந்தவள்..
முதுமையின் நிசப்த வனத்தில்
வார்த்தைகளைப்
பிச்சையெடுத்து
காத்திருக்கிறாள்..
கவிதை அருமை.... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete