Monday, 6 January 2014

திறவா நெடுங்கதவம்

உண்ணா சிறுவயிறு
(உண்ணா வயிறு
கதவினை விட வலியது)

அணைக்காது போன கைகள்

தகித்த காதுகளுக்கு
தானமிடாத சொற்கள்

கனவில் வளர்ந்து
என்றும் நிறைவேறாத
முத்தம்

இன்னும் சிலவோடு
சேர்ந்த இவ்வாழ்வை
நான் ஏன்
இத்தனை நேசிக்கிறேன்..

No comments:

Post a Comment