Saturday, 4 January 2014

என்ன சொன்னாய்..?

கீச்சாங்குருவிகள்
சற்று 
தாமதமாகதான் வாய்மூடின..

மலையருவியைப் பற்றி
சொல்லவே வேண்டாம்..

ஙொய்யெனும் தேனீக்களுக்கோ
உனது
வார்த்தைகளைப் பற்றிய
கவலை இல்லை..

சுவர்க் கோழிகள்
என்றைக்கு வாய் மூடின..

வேறொன்றுமில்லை..

அதிர்ந்ததிர்ந்து
அடங்கும் என்
மனதுக்காகக் கேட்கிறேன்..

பொய்யில்லாமல் சொல்..

அப்போது நீ
என்ன சொன்னாய்..?

1 comment:

  1. என்ன சொல்லிச்சு சகோ.. எனக்கும் சொல்லுங்கள்..
    அறிந்திட ஆவல்!..:)

    அருமை உங்கள் கற்பனை!
    வாழ்த்துகிறேன் சகோ!

    ReplyDelete