தெய்வங்களை
துணைக்கழைக்கத் தெரியாத
சிறுமி அல்லது குழந்தை..
நீங்கள்
பிரார்த்தனைகளை
அனுப்புவதை விட
ஒரு சயனைடு குப்பியை ஏன்
அவளுக்கு துணைக்கனுப்பக் கூடாது..?
தேவாதி தேவர்கள்
எல்லாம்
பார்க்கத்தானே நடந்தது அது..
வாதனையை
கத்த விடாமல்
அமுக்கிய கைகளுக்கு
என்ன தண்டனை
தரப் போகிறீர்கள்..?
ஒரு அறை
உடல் நடுங்க ஒரு செருகல்
இதன் வலி
உங்களுக்குப் புரிந்தால்
உங்கள் பெண் குழந்தைகளை
சக மனிதர்களுக்கு
ஒப்புக் கொடுக்க மாட்டீர்கள்...
அன்பர்களே..
குறைந்தபட்சம்
உங்கள் சமூகத்தை விட
உங்கள்
பெண் குழந்தைகளை
உங்களால் நேசிக்க முடியாதா..?
துணைக்கழைக்கத் தெரியாத
சிறுமி அல்லது குழந்தை..
நீங்கள்
பிரார்த்தனைகளை
அனுப்புவதை விட
ஒரு சயனைடு குப்பியை ஏன்
அவளுக்கு துணைக்கனுப்பக் கூடாது..?
தேவாதி தேவர்கள்
எல்லாம்
பார்க்கத்தானே நடந்தது அது..
வாதனையை
கத்த விடாமல்
அமுக்கிய கைகளுக்கு
என்ன தண்டனை
தரப் போகிறீர்கள்..?
ஒரு அறை
உடல் நடுங்க ஒரு செருகல்
இதன் வலி
உங்களுக்குப் புரிந்தால்
உங்கள் பெண் குழந்தைகளை
சக மனிதர்களுக்கு
ஒப்புக் கொடுக்க மாட்டீர்கள்...
அன்பர்களே..
குறைந்தபட்சம்
உங்கள் சமூகத்தை விட
உங்கள்
பெண் குழந்தைகளை
உங்களால் நேசிக்க முடியாதா..?
சமூக அதிர்வுகள்
ReplyDeleteகவிதை வரிகளில் உறைந்து
காலத்தின் வாக்குமூலமாய்