Wednesday, 8 January 2014

நினைவு தெரிந்து ஒருநாளும்
அள்ளியெடுத்து நுகர்ந்ததிலலை
இவ்வாழ்வு..

போனால் போகிறதென்று
இரக்கப் பட்டதுமில்லை..

எந்நாளும்
அமிலம்போல்
துயரை
உண்ணக் கொடுத்தபடியே
இருக்கிறது இது..

என்றைக்கு உடையும்
என்பது தெரியவில்லை..

இருந்தாலும்
நடுங்கும் மனதோடு
அந்த உடையும் கணத்தை
எதிர்பார்த்தபடியே
இருக்கிறேன் நான்..

கொன்றுவிடாதிருக்கும் பொருட்டு
என்ன தர
இவ்வாழ்க்கைக்கு..

No comments:

Post a Comment