கண்டக்டர் ஜக்கைய பாவாவின்
இரண்டாம் மனைவியாக
வாய்க்கப் பெறாத துக்கத்தில்
வயிற்றுப் பிள்ளைக் காரியாக
செத்துப போன அமுதாக்கா
மல்லிகாவின் மேல் வந்து கேட்கிறாள்..
கோழி கொடு..
சுருட்டு கொடு..
சூடியும் தீராத
மல்லிகைப் பூ கொடு..
சிவப்பு கலர்
புடவை கொடு..
என்றென்றும் இனிமேல்
ஆசை வைத்த பெண்களை
ஏமாற்றாமல் தாலி கொடு
என்றெல்லாம்..
அமுதாக்கா மேல்
இரக்கப்படும் யாதொருவருக்கும்
வெறுங்கழுத்து மல்லிகாவின் மேல்
இரக்கம் வராதது
ஆச்சரியமே..
இரண்டாம் மனைவியாக
வாய்க்கப் பெறாத துக்கத்தில்
வயிற்றுப் பிள்ளைக் காரியாக
செத்துப போன அமுதாக்கா
மல்லிகாவின் மேல் வந்து கேட்கிறாள்..
கோழி கொடு..
சுருட்டு கொடு..
சூடியும் தீராத
மல்லிகைப் பூ கொடு..
சிவப்பு கலர்
புடவை கொடு..
என்றென்றும் இனிமேல்
ஆசை வைத்த பெண்களை
ஏமாற்றாமல் தாலி கொடு
என்றெல்லாம்..
அமுதாக்கா மேல்
இரக்கப்படும் யாதொருவருக்கும்
வெறுங்கழுத்து மல்லிகாவின் மேல்
இரக்கம் வராதது
ஆச்சரியமே..
ஜோர் டைரக்டர்
ReplyDeleteமறைந்திருக்கும் கதை கவியின் கண்களுக்கு தெரிந்த வெறும் கழுத்து
ஆகா நந்தன் !