Wednesday, 18 December 2013

கறுத்த வானம்
ஏற்பதில்லை
என் புகார்களை..

விலக்கி வைத்தாலும்
என் மனதருகிலேயே
ஒலிக்கின்றன அக்குரல்கள்..

இரவு
துயராலானது..

பகல்
வாதைகளாலானது..

தனித்திருத்தல்
யாருக்கு சுகம்..

விழித்திருத்தல் 
துயரம்..

ஒரு சாபத்தினாலேனும்
நான்
கல்லாலானால் என்ன..

1 comment:

  1. பொறுத்திரும் பூமியுள் போன புதையல்
    வெறுத்திடும் முன்பே வரும்!

    பொறுமை எல்லை கடந்த கவிதை.. அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete