பசியின் நிறம்..
செடியின் பசி
என்ன நிறமாயிருக்கக் கூடும்..?
ஒரு புலியின் பசியைவிட
ஒரு பூனைக்குட்டியின் பசி
மிகப் பெரியது என்பதை
எல்லோரும் அறிவீர்கள்தானே..?
அந்த சிறுவனின்
பசி
இட்டிலிகளின் வண்ணத்தில்
இருக்கக் கூடுமோ..
எனக்குத் தெரிந்து
பசியை அறிந்தவனின் பசி
நெருப்பின் நிறத்தில் இருந்தது..
இன்னொருவனின் பசி
உணவை திரட்டி வந்தது..
ஒரு வேளை
இந்த
பசிமட்டும் இல்லையெனில்
யாவருக்கும்
கண்ணீரின்
நிறமோ சுவையோ
தெரியாமல்
போயிருக்கக் கூடும்..
ஆயினும்
எனக்கு ஒருவனைத் தெரியும்..
கொட்டிக்கிடக்கும்
கண்ணாடிக் கற்களினிடையில்
வைரத்தை அடையாளம் காணும்
பொற்கொல்லனைப் போல
கண்களில் பளிச்சிடும்
பசியை அடையாளம் காண
வரம் பெற்றவன் அவன்..
இடக்கையில் அளையும்
நீரில் தட்டுப்படும்
எல்லாப் பசியையும்
ஒரு முத்தத்தில்
சொஸ்தப்படுத்துபவனாகக்கூட
அவன் இருக்கக் கூடும்..
தவிக்கும் உள்ளத்துககான
ஒரு கண்ணீர்த்துளியைப் போல
பசித்த எம் வயிற்றுக்கு
உணவினைத் தந்தாய்..
பிதாவே
நீ எனக்கு
அன்னையும் ஆனாய்..
பிதா, சுதன், பரிசுத்த ஆவி
மற்றும் என்
உலர்ந்த வயிற்றின் பெயரால்
உன்னை
ஆசீர்வதிக்கிறேன்..
யாரேனும் ஆமென் சொல்லுங்கள்..
செடியின் பசி
என்ன நிறமாயிருக்கக் கூடும்..?
ஒரு புலியின் பசியைவிட
ஒரு பூனைக்குட்டியின் பசி
மிகப் பெரியது என்பதை
எல்லோரும் அறிவீர்கள்தானே..?
அந்த சிறுவனின்
பசி
இட்டிலிகளின் வண்ணத்தில்
இருக்கக் கூடுமோ..
எனக்குத் தெரிந்து
பசியை அறிந்தவனின் பசி
நெருப்பின் நிறத்தில் இருந்தது..
இன்னொருவனின் பசி
உணவை திரட்டி வந்தது..
ஒரு வேளை
இந்த
பசிமட்டும் இல்லையெனில்
யாவருக்கும்
கண்ணீரின்
நிறமோ சுவையோ
தெரியாமல்
போயிருக்கக் கூடும்..
ஆயினும்
எனக்கு ஒருவனைத் தெரியும்..
கொட்டிக்கிடக்கும்
கண்ணாடிக் கற்களினிடையில்
வைரத்தை அடையாளம் காணும்
பொற்கொல்லனைப் போல
கண்களில் பளிச்சிடும்
பசியை அடையாளம் காண
வரம் பெற்றவன் அவன்..
இடக்கையில் அளையும்
நீரில் தட்டுப்படும்
எல்லாப் பசியையும்
ஒரு முத்தத்தில்
சொஸ்தப்படுத்துபவனாகக்கூட
அவன் இருக்கக் கூடும்..
தவிக்கும் உள்ளத்துககான
ஒரு கண்ணீர்த்துளியைப் போல
பசித்த எம் வயிற்றுக்கு
உணவினைத் தந்தாய்..
பிதாவே
நீ எனக்கு
அன்னையும் ஆனாய்..
பிதா, சுதன், பரிசுத்த ஆவி
மற்றும் என்
உலர்ந்த வயிற்றின் பெயரால்
உன்னை
ஆசீர்வதிக்கிறேன்..
யாரேனும் ஆமென் சொல்லுங்கள்..
அருமையான கவிதை நந்தனார் ....
ReplyDeleteஅடிக்கடி தாருங்கள்
நன்றி..
மிக்க நன்றி தோழர்..
Deleteகவிதை அருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழர்..
Deleteமனந்தொட்ட கவிதை சகோதரரே!..
ReplyDeleteஉங்கள் வலைப்பூவிற்கு சகோதரர் மதுவின் வழியாக வந்தேன்!
தொடருங்கள்... தொடர்கிறேன் நானும்.
அன்பான வாழ்த்துக்கள் சகோ!
சகோதரர் மதுவிற்கும் என் நன்றிகள்!
நன்றி நன்றி நன்றி தோழர்..
Deleteநன்றிக்கு நன்றி தோழரே!
Deleteநான் இளமதி என்னும் பெண்மதி....:)
வாருங்களேன் என் வலைத்தளத்திற்கும் நேரங்கிடைக்கும்போது....
http://ilayanila16.blogspot.com
வணக்கம் சகோதரரே..!
ReplyDeleteபசி இன்றி வாழ ஒரு வாம் வேண்டுமே
விதியின்றி வாழ ஒரு வழியில்லையோ.
பசி வதை உருக வைத்தது.
மதுவின் வலையின் ஊடாக வந்தேன். தொடர்கிறேன்.
தொடர வாழ்த்துக்கள்......!