Wednesday, 11 December 2013

குவிந்த விரல்களினுள்
சோற்றினைப் பொதித்து வைத்து
வாசல்
கட்டிலடி
கூடம் என்று
துரத்தியபடி இருந்தது
அம்மாவின் கை..

குழந்தை சொன்னது
அம்மா என்றால்
சோறு..

2 comments:

  1. கட்டிலடி
    கூடம் (மற்றும்
    தெருமுக்கு) என்று
    துரத்தியபடி இருந்தது
    என்று சேர்ததுக் கொண்டாலும் தவறிலலை கவிஞரே!
    என்ன உக்கிரமாக கவிதை! ஆற்றுப்படுத்திய தம்பி கஸ்தூரிக்கு நன்றியும் உங்களுக்குப் பாராட்டுகளும்.
    தொடர்கிறேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தோழர் முத்து நிலவன்..

      Delete