Saturday 24 December 2011

நேற்றுப் பெய்த மழை 
ஸ்ருதியினுடையது.
தண்ணி நூல் என்று 
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை 
அமுதாவினது.
டம் டம் என்பது 
அதன் பெயர்.

நாளைய மழைக்கு 
ரெயின் என்று பெயர் வைத்து 
காத்திருக்கிறான் 
டிச்சாங்கா எனப்படும் 
த்ரிஷாங்கன்.

கால காலமாக 
கனகோடி நூறாண்டாக 
பெய்யெனப் பெய்து 
வையத்தை வாழ்வித்தபடி 
பொழிந்தபடி இருக்கும் 
இந்தப் பெருமழை 
புன்னகையோடு 
பிள்ளைகள் வைக்கும் 
பெயருக்காகவும் 
பெய்தபடி இருக்கிறது.

1 comment:

  1. இன்னைக்கு 'அசிஸ்டென்ட் diraktar' .. ஆனா என்னைக்குமேவா?

    அப்புறம் ஏன் இந்தப் பெயர்..?

    ReplyDelete