அங்கே இங்கே ஓடாதே
மாடிப் படிகள் ஏறாதே
அடுக்களை வேலைகள்
அளவாய் செய்.
அதிகம் சுமைகள்
தூக்காதே.
ஹார்லிக்ஸ் பூஸ்ட்
குடித்துக்கொள்.
குங்குமப் பூவும்
சேர்த்துக் கொள்.
பையன் பிறந்தால்
சொல்லி விடு.
என் அப்பா பேர் வைக்கலாம்.
என் அப்பா பேர் வைக்கலாம்.
பெண் பிறந்தால்
கொன்று விடு.
அவள் கல்லறையில்
பூ வைக்கலாம்.
(எனது நண்பர் லிசாவின் கவிதை இது. எனக்குப் பிடித்த கவிதை என்பதால் போஸ்ட் செய்து இருக்கிறேன்.)
பெண் பிறந்தால்
ReplyDeleteகொன்று விடு.//
அய்யயோ !!
இது பெண் சிசுக் கொலையை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு கவிதை. படித்ததும் பெண் சிசுக்கொலையைப் பற்றிய கொடூரத்தை நம் மனதில் ஓங்கி அறைவதால் எனக்குப் பிடித்திருந்தது.
ReplyDelete