Saturday, 12 November 2011

மழை


மழைத் துளிகள் விடாமல்
நிலத்தோடு பேசுகின்றன 
மழைப் பேச்சு.

நாம் சந்தித்தபோது 
பெய்த மழை 
அல்ல இது.

நாம் பிரிந்தபோது
பெய்த மழையும் அல்ல.

ஒரு வேளை 
யாரோ இன்று 
சந்திக்கிறார்கள் போலும்.

அல்லது 
பிரியவும் கூடும்.

பிரிவெனில் ஒரு வசதி
மழையில் அழுதால் 
தெரியாது. 

1 comment:

  1. பதிவுலகம் கண்ட படைப்பாளிக்கு வணக்கமு வாழ்த்தும் வரவேற்பும்!!

    ReplyDelete