Wednesday 18 December 2013

பதின்வயது சிறுவன்தான்
உங்க டேஸ்ட்டை சொல்லுங்க சார்..
ஃபிகரை நான் கொண்டு வறேன்
என்றான்..

நகரின்
அநாதை இரவுகளில்
அவன் பார்த்த 
புணர்வுகளில் கற்றுக் கொண்டவனாயிருக்கும்..

புன்னகையுடன் 
மறுக்குங்கால்
எதுனா காசு குடுத்துட்டு போ துரை
என்கிறான்..

சட்டைப் பையிலிருந்து
எடுத்த பணத்தை
நீட்டுகையில்
என் கை நடுங்குகிறது
அவன் கை பசித்திருக்கிறது..

2 comments:

  1. நசித்தே வறுமையால் நல்லவை மாயப்
    பசித்திட பத்தும் பறந்து!

    பசியின் கொடுமை விதைக்கின்றது
    பிஞ்சு நெஞ்சுகளில் நஞ்சு!

    வலிக்கின்ற வரிகள் சகோ!

    ReplyDelete