தர்மம் செய்த 
ஐய்யாமார்களுக்கு 
அருகில் நிற்க கூச்சப்பட்டு 
நனைந்தபடி நிற்கும் 
பிச்சைக்காரக் கிழவிக்காகவும்...
ஊறிய ஈரத்துணியாக 
குப்பையில் செத்துக்கிடந்த 
ஐந்து பூனைக்குட்டிகளுக்காகவும்..
தெர்மாகோல் படகில் 
பள்ளி செல்வதாக 
பேப்பர் புகைப்படத்தில் 
வருடந்தோறும் புன்னகைக்கும் 
அறியா சிறுவர்களுக்காகவும்...
வீட்டுக்குள் தேங்கிய 
கழிவு நீருக்கு நேர்மேலே 
தொட்டிலில் தூங்கும்
சின்ன குழந்தைக்காகவும்...
இன்ன பிற 
பாவப்பட்ட சீவாத்திகளுக்காகவும்..
இந்த சென்னை மாநகரிலே
எப்போது பெய்தாலும் 
கொஞ்சமாய் பெய்யட்டும் 
மழை... 
மனதை வலிக்க செய்யும் சூழ்நிலைகள். நான் அடிக்கடி நினைப்பதுண்டு. இந்த மழையை கண்ட்ரோல் பண்ணும் ரிமோட் யார் கையிலாவது இருந்தா தேவலாம் என்று
ReplyDeletemikka nanri thozhar.
ReplyDelete